1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!!

 1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. தமிழ்நாட்டிலும் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக இருந்தது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இந்த செய்தியையும் படிங்க…

BREAKING: STATE GOVERNMENT EMPLOYEES-  JANUARY 2022 – DAஉயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! 

அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி 9-ம் வகுப்பு 12-ம் வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். ஒரு சில இடங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது சீராக உள்ளது. இந்தநிலையில், மீதமுள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

இந்தநிலையில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 14-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : தமிழக அரசு..!! 

ஏற்கெனவே, ஆகஸ்ட் மாதம் முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை செய்யவுள்ளார்.

Leave a Comment