1 முதல் 5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் ...!!! - Tamil Crowd (Health Care)

1 முதல் 5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் …!!!

 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் …!!!


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை. அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும், என பெற்றோர்கள் கோரி உள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு .

தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது, இதற்காக நீண்ட நேரம் டிவி கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய இருப்பதால் பெரும்பாலான மாணவர்களுக்கு கண் எரிச்சல் வலி போன்றவை ஏற்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர், எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்பின்னர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன படிப்படியாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வருகின்றது பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் அடுத்தடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த- பள்ளிக்கல்வி துறை முடிவு! 

இதனை அடுத்து 9 ,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வழி கல்வி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து விட்டதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment