1 முதல் 9ம் வகுப்பு வரை பயிற்சி கையேடு, குறிப்பேடுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் -பள்ளிக் கல்வித் துறை உத்தரவு..!!
1 முதல் 9 ஒன்பதாம் வகுப்பு வரை பயிற்சி கையேடு குறிப்பேடுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறை உத்தரவு- பயிற்சிகள் மூலம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை முழுமையான அளவில் தயார்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அந்த ஆண்டு 10,11ம் வகுப்புகளுக்கும் அதன் கீழுள்ள வகுப்புகளுக்கும் ‘ஆல் -பாஸ்’ வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டின் இறுதியில் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் கல்லூரிகள் மட்டும் தொடங்கின. பள்ளிகளில் 9.ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உரிய வழிகாட்டுதலுடன் பாடங்கள் நடத்தப்பட்டன இந்நிலையில் ,இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகம் எடுத்ததை அடுத்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பிளஸ் டூ பொதுத்தேர்வு மட்டும் நடத்த திட்டமிடப்பட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு தற்போது தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அதே நேரத்தில் 9ம் வகுப்பு முதல் பருவம் 11ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் வழங்கப்பட்டது. பள்ளி திறக்கப்படாமல் முடங்கி போன மாணவர்களால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கையேடு மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும். அவற்றின் மூலம் அவர்களுக்கு பாடங்களை நினைவுறுத்தும் பணியினை மேற்கொள்ளவும், இதன் மூலம் அவர்களின் கல்வி நலனை ஓரளவு பாதுகாக்க முடியும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களின் அடிப் படையில் பயிற்சி கையேடு மற்றும் குறிப்புகளைத் தயார் செய்து அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பயிற்சிகள், குறிப்புகளை மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகளின் கையொப்பமும் குறிப்பிட்ட காலக் கெடுவில் அவற்றை பூர்த்தி செய்து பள்ளிகளில் திருப்பி வழங்க கேட்டுக் கொள்ளும் படியும் பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.