04.09.2021 Last date: ரூ.1,80,000 சம்பளத்தில் HAL (எச்ஏஎல்) நிறுவனத்தில் வேலை-2021..!!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ கண்காணிப்பாளர், மூத்த மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
காலியிடங்கள்: 09
பணி: Medical Superintendent
பணி: Senior Medical Officer
தகுதி : மருத்துவத் திறையில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,80,000
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 SC., ST., பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : https://hal-india.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Senior Manager (HR) Hindustan Aeronautics Limited Medical & Health Unit,
Suranjandas Road,
Vimanapura Post
Bangalore – 560 017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.hal-india.co.in/ அல்லது https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1428_CareerPDF1_Detailed%20Advertisement%20%20Doctors%20for%20Permanent%20Posts%20in%20M%20and%20H%20Unit%20HAL%20BANGALORE.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.