😃😃 அரசின் முக்கிய அறிவிப்பு- தமிழகத்தில் பள்ளிகளுக்குகாலவரையற்ற விடுமுறை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்து வந்த பாதிப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகமாக கொரோனா உறுதியாகி வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை மூட வேண்டுமென அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை:
இந்த நிலையில், தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/ டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மற்ற வாரியங்கள் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள படி நடைபெறும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தலாம். விடுதிகளும் இயங்கலாம். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி பன்னிரண்டாம் வகுப்பு நடத்தலாம். அம்மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.