வைரஸ் அழிக்க மூலிகை மருத்துவம்: ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு..!! - Tamil Crowd (Health Care)

வைரஸ் அழிக்க மூலிகை மருத்துவம்: ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு..!!

 வைரஸ் அழிக்க மூலிகை மருத்துவம்: ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு..!!

‘மூலிகை மருத்துவத்தால், புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியும்’ என்று ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ‘மூலிகை மருத்துவத் தால் மட்டுமே, புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியும்’ என்று, தமிழ் புத்தாண்டில் வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து கூறப்பட்டுள்ளது.அதில், ‘ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வருஷ தேவதையாக வருவதால், புதிய வைரஸ் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை இந்தியா தயாரிக்க நேரும்; 

புதிய ரத்த புற்றுநோய் ஒன்று வட கிழக்கு திக்கில் இருந்து உற்பத்தியாகி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும். புதிய வைரஸ் தொற்றால் மீண்டும் உலகம் ஸ்தம்பிக்க நேரும். மக்கள் கடும் அவஸ்தைப்படுவார்கள். பண பற்றாக்குறை ஏற்பட்டு, கேரளா, தமிழகம் கடுமையாக பாதிக்கும். மூலிகை மருத்துவம் மூலம்தான் புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியும்’ என்பது உள்ளிட்ட பலன்கள், கணித்து கூறப்பட்டுள்ளன.ஆற்காடு சீதாராமய்யர் எழுதி, கடந்த ஆண்டு வெளியான பஞ்சாங்கத்தில், ‘புதிய வைரஸ் கிருமியால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவர்’ என, ஏற்கனவே கணித்து கூறப்பட்டிருந்தது.

Leave a Comment