வேலைவாய்ப்பு துறையில் பாதிப்பு..!! - Tamil Crowd (Health Care)

வேலைவாய்ப்பு துறையில் பாதிப்பு..!!

 வேலைவாய்ப்பு துறையில் பாதிப்பு..!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.இணைய வேலைவாய்ப்பு தகவல் நிறுவனமான, ‘மான்ஸ்டர்’ நடத்திய ஆய்வில், இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் 3 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் -ஓராண்டுக்கு நிறுத்தம்..!! 

மேலும், ஆண்டு அடிப்படையிலும் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் 4 சதவீதம் குறைந்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தளங்களில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.கொரோனா அலை பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்பு தகவல்கள் வெளியிடப்படுவது குறைந்திருந்தாலும், குறிப்பிட்ட நகரங்களில் குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில், விளம்பரம், சந்தை ஆய்வு, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு தகவல்கள் அதிகரித்துள்ளன. கோல்கட்டாவில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் வெளியாவது அதிகரித்துள்ளது.

Leave a Comment