வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால்- 5 கொரோனா நோயாளிகள் பலி..!!
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் திடீரென உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -மருத்துவமனையில் அனுமதி..!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வீரியமிக்க இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதேபோல் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோருக்கு ஆக்ஸிஜன் சேவை அதிகளவில் வைக்கப்படுவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஸிஜன் விநியோகத்தில் பிரச்னை இருப்பதாக அம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது டேங்கரில் இருந்து ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் எனவும் நீண்ட நேரம் ஆக்ஸிஜன் வழங்காமல் தாமதப்படுத்தியதாலேயே நோயாளிகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உயிரிழந்தவர்களில் இருவர் கொரோனா நோயாளிகள் இல்லை என்றும், மருத்துவமனையில் போதிய அளவில் ஆக்ஸிஜன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.