வேர்க்கடலை(benefits of pea nuts)சாப்பிடுங்கள்-நினைவாற்றல் அதிகரிக்கிறது,இதய நோய் வராமல் தடுக்கிறது..!!
- வேர்க்கடலை(pea nuts)க்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது. இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
- இதிலுள்ள வைட்டமின் பி (Vit ‘B’ & ‘C’) மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
- இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
- இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது.
- நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
- பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.
- இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.
- நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும் தடுக்கப்படுகிறது.
- விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி உதிர்வதையும் தடுக்கிறது.
- இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.