வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு- இ-பாஸ் கட்டாயம்..!!
வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம்.
வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வருவோருக்கு இ-பாஸ் இன்று முதல் கட்டயமாக்கப்பட்டதை தொடர்ந்து, ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க….
சென்னையில் தீவிரம்-இந்த வயதுக்காரர்களை குறிக்கும் வைக்கும் கொரோனா..!!
இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, இன்று அதிகாலை முதல் வருவாய் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வெளி மாநிலங்களில் இருந்து வரும் இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
இந்த செய்தியையும் படிங்க….
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!!
மேலும், வாகனத்தில் வருவோருக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப் படுவதுடன், வாகனங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. எனினும் சரக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட்டது.