விவேக்கின் நிறைவேறாத இரு ஆசைகள்! - Tamil Crowd (Health Care)

விவேக்கின் நிறைவேறாத இரு ஆசைகள்!

 விவேக்கின் நிறைவேறாத இரு ஆசைகள்!

தமிழ் சினிமாவில் சிரிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைத்த நடிகர், கவிஞர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட விவேக்(59) உயிரிழந்தார். அப்துல் கலாமின் தீவிர ஆதரவாளராக இவர், தன் வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்ற லட்சியத்துடன் வாழ்ந்துவந்தார். நடிப்பை தாண்டி பல்வேறு பொது சேவைகளையும், சமூக விழிப்புணர்வையும் வழங்கிவந்த விவேக்கின் மரணம் அவரது திரைபிரபலங்களை மட்டுமின்றி, சாமானியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த செய்தியையும் படிங்க…

விவேக் தேடி கிடைக்காத அந்தப் புகைப்படம்; கிடைத்தது அவர் மறைந்தபிறகு..!! 

இந்நிலையில் நடிகர் விவேக்கின் இரண்டு ஆசைகள் நிறைவேறாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்,முன்னணி நடிகர்கள் மற்றும் புதிய நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால் அவர் திரையுலகிற்கு வந்த நாளிலிருந்து அவருக்கு கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பது ஆசை ஆனால் 30 ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு அண்மையில் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான அடுத்த நொடியே தனது நீண்ட கால கனவு நிறைவேறப்போவதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சிப்பொங்க தெரிவித்திருந்தார் விவேக். ஆனால் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அதேபோல் திரைப்படங்களை இயக்கவும் நடிகர் விவேக் ஆசைப்பட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றன. அதுவும் நிறைவேறாமல் போனது.     

Leave a Comment