வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள் – வெற்றி சான்றிதழ் யாருக்கு..??
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் காலை 8 மணிக்கே தயார் நிலையில் உள்ளது. முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணபடுகின்றன .அதைதொடர்ந்து காலை 8.30 மணிக்கு, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல், சரியாக உள்ளதா மற்றும் வாக்குப்பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும் , வாக்கு எண்ணிக்கை தினத்தன்று எண்ணப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்படும். மொத்தமாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில்எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையானது, 15 முதல் 30 சுற்றுகள் வரை நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், முடிவுகள் வெளியிடும் முன்பாக, அரசியல் கட்சிகளை சார்ந்த முகவர்களின் கையொப்பம் பெறப்படும். பின்னர் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திலுள்ள அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த செய்தியையும் படிங்க……
வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி- முகவர்கள் யார்..?? பணி என்ன..??
கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி 2,364 எண்ணும் அரங்குகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.