வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்- சத்யபிரதா சாகு..!!
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு..!!
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் 2021 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.