வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இளைஞர்களை நியமிக்க திட்டம்- கரோனா பரவலை தடுக்க வேட்பாளர்கள் ஏற்பாடு..!! - Tamil Crowd (Health Care)

வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இளைஞர்களை நியமிக்க திட்டம்- கரோனா பரவலை தடுக்க வேட்பாளர்கள் ஏற்பாடு..!!

 வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இளைஞர்களை நியமிக்க திட்டம்- கரோனா பரவலை தடுக்க வேட்பாளர்கள் ஏற்பாடு..!!

கரோனா பரவலால் பாதிப்பைத் தவிர்க்க வாக்கு எண்ணிக்கைக்கு அனுப்பும் முகவர் களில் 85 சதவீதம் பேரை இளைஞர்களாகவே தேர்வு செய்வதில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது வேட்பாளர்கள் சார்பில் முகவர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான பட்டியலை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இந்த செய்தியையும் படிங்க….

 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்- ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்:பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!! 

14 மேஜைகளை கண்காணிக்க தலா ஒருவர், தபால் வாக்குக்கு 2 பேர், தலைமை முகவராக ஒருவர் என ஒவ்வொரு வேட்பாளருக்கும் 17 முகவர்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. முகவர்களுக்கு நாளை (ஏப்.29) கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும். தவறினால் கரோனா தடுப்பூசியில் ஒன்றையாவது செலுத்தியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 17 பேர் எனில், அனைத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கும் கரோனா பரிசோதனை களை மேற்கொள்வது சிரமம் என்பதால் தொகுதிக்கு ஓர் இடத்தில் சிறப்பு முகாம் ஏப்.29-ல் (நாளை) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை அளிக்கும் முகவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வேட்பாளர் ஒருவர் கூறிய தாவது: “முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தனது சார்பிலும், தன் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் சிலர் சார்பிலும் முகவர்களை நியமிப்பது வழக்கம். கரோனா பாதிப்பால் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக 85 சதவீதத்துக்கும் அதிகமானோரை இளைஞர்களாகத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த செய்தியையும் படிங்க….

 55 வயதுக்கு மேற்பட்டோரை -100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அனுமதிக்கக்கூடாது: தமிழக அரசு..!!

அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் கரோனா பரவலால் பாதிக்கப்படமாட்டார்கள். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக 20 சதவீத முகவர்களின் பட்டியலை அளித்துள்ளோம். கரோனா பரிசோதனையில் யாருக்கேனும் பாதிப்பு உறுதியானால் மாற்று முகவர் வாக்கு எண் ணிக்கைக்கு அனுப்பப்படுவார். ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தயாராகவே உள்ளோம் என்றார்.

Leave a Comment