வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.?? வழிமுறைகள் என்ன..?? - Tamil Crowd (Health Care)

வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.?? வழிமுறைகள் என்ன..??

 வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.?? வழிமுறைகள் என்ன..??

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கன்னியாகுமரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 76 மையங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க….

ஏப்ரல் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..!! 

* வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் 8 மணிக்கு தயாராக இருக்கும்.

* தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

* முதல் கட்ட நடவடிக்கையாக தபால் வாக்கு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள் முன்னிலையில் காலை 8 மணிக்கு தொடங்கும்.

* தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

* ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு அதற்கென தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள்.

* 14 மேஜைகளுக்கும் ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள்.

* வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல் சரியாக இருக்கிறதா என்பதை முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதிசெய்யப்படும்.

* தொகுதி, வாக்குச்சாவடி, வார்டு வாரியாக பதிவான வாக்குகள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் எண்ணப்படும்.

* வாக்குப் பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும் , எண்ணிக்கை தினத்தன்று எண்ணப்படும் வாக்குகளும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். குறைந்தபட்சமாக 15 சுற்றுகளும் அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

* ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகள் எண்ணிக்கை வெளியிடும் முன்பாக அரசியல் கட்சி முகவர்களின் கையொப்பம் பெறப்படும்.

* ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செய்தியையும் படிங்க….

உறுதி செய்யப்படும் -ஆசிரியர்கள் வருகை..!! | 

* பிற்பகலுக்குள்ளாக முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார் ? வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார் ? என்பது ஓரளவிற்கு தெரிந்துவிடும்.

* வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

Leave a Comment