வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி- முகவர்கள் யார்..?? பணி என்ன..?? - Tamil Crowd (Health Care)

வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி- முகவர்கள் யார்..?? பணி என்ன..??

 வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி- முகவர்கள் யார்..?? பணி என்ன..??

நாளை வாக்கு எண்ணிக்கை அரசியல் கட்சிகளின் முகவர்களின் முன்னிலயில் நடைபெறும். 

முகவர் என்பவர் யார்? 

அவரின் பணிகள் என்ன? 

வாக்கு எண்ணிக்கையின்போது அவரது பங்கு என்ன?

 என்று பார்க்கலாம்.

  • அரசியல் கட்சி, வேட்பாளர்களின் நம்பிக்கைக்குரியவர்களே முகவர்களாக நியமிக்கப்படுவார்கள். 
  • 18 வயது நிரம்பியவர்கள் முகவர்களாக நியமிக்கப்படுவர். 
  • வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக முகவர்கள் செயல்படுவர். 
  • வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பது முகவர்களின் பிரதான பணி. 
  • வாக்கு எண்ணிக்கைக்கு 3 தினங்களுக்கு முன்பாக முகவர்கள் யார் என்பது உறுதி செய்யப்படும். 
  • ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு வேட்பாளருக்கு தலைமை முகவர் உட்பட 15 முகவர்கள் இருப்பார்கள்.
  • முகவர்களின் பணி தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இருக்கும். 
  • தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடிதமே முகவர்களின் அடையாள அட்டை. 
  • தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. 
  • வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகளை முகவர்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். 
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி, சுயேச்சை என்ற அடிப்படையில் முகவர்களுக்கு இடம் ஒதுக்கீடு,
  • அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்போர் முகவராக செயல்பட முடியாது. 
  • அரசு அதிகாரிகள், அலுவலர்கள் முகவர்களாக செயல்பட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
  • அரசுப் பணியில் இருப்போர் முகவராக செயல்பட்டது தெரியவந்தால் மூன்று மாதம் சிறை அபராதம் விதிக்கப்படும்.

Leave a Comment