வாக்கு எண்ணிக்கையை நிறுத்தைவைக்க நேரிடும்- தேர்தல் ஆணையம் மீது கோபமடைந்த நீதிபதிகள்..!!
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் தொடங்கியது முதல் பரபரப்பாக இருந்த தொகுதி கரூர் தொகுதி. அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டி. பிரச்சாரம் தொடங்கியது முதல் மோதல் சம்பவங்கள், தேர்தல் விதிமுறை சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.
இந்த நிலையில், கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த செய்தியையும் படிங்க….
தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!!
அப்போது, கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மட்டுமல்லாது தமிழகம் முழுதும் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.
அப்போது, தேர்தல் பிரச்சாரம் நடத்த போதேல்லாம்,வேறு கிரகத்தில் இருந்தீர்களா என தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம், என்றும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம் எனவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணைம் அதை காதில் வாங்கவில்லை என்றும் நீதிமன்றம் காட்டமாகக் கூறியுள்ளது.
இதனால், உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்றும் தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி கூறினார்.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று, உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த செய்தியையும் படிங்க….
வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு- இ-பாஸ் கட்டாயம்..!!
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.