வங்கி விடுமுறை : மே (2021) மாதத்தில்- எந்தெந்த நாட்கள் விடுமுறை…!!!
மே (2021) மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை.
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 12 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான். ஆனால் மே மாதத்தில் மொத்தமாக 5 ஞாயிற்றுக்கிழமை, மற்றும் 2 சனிக்கிழமை வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
SBI Alert: கொரோனா பெயரில் கொள்ளை- பணம் செலுத்தும் முன் கவனமாக இருங்க!
இந்நிலையில், ரிசர்வ் வங்கி மே மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாள் விடுமுறை எல்லா மாநிலங்களும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 1, மே 7, மே 13, மே 14 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
தொழிலாளர் தினம் நாளான மே 1 – ஆம் தேதி அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டெஹ்ராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகள் செயல்பாட்டில் இருக்கும்.
ஜுமாத்-உல்-விதா நாளான மே 7 -ஆம் தேதி ஜம்மு மற்றும் சிம்லா தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் திறந்திருக்கும்.
ரம்ஜான் நாளான மே 13 -ஆம் தேதி பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் விடுமுறை.
பகவன் ஸ்ரீ பர்சுரம் ஜெயந்தி நாளான மே 14 -ஆம் தேதி பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..??
புத்தர் பூர்ணிமா நாளான மே 26-ஆம் தேதி அகமதாபாத், ஐஸ்வால், பெங்களூரு, புவனேஷ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, பனாஜி, பாட்னா, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் மாநிலங்களில் ஆகிய வங்கிகள் செயல்படும்.