லாசா வைரஸ்- லஸ்ஸா காய்ச்சல்
லஸ்ஸா காய்ச்சல்(Lassa Fever) என்பது லாசா வைரஸால்(Lasha virus) ஏற்படும் கடுமையான வைரஸ் ரத்தக்கசிவு நோயாகும். இந்த வைரஸ் முதன்முதலில் 1969 ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள லஸ்ஸா நகரத்தில் கண்டறியப்பட்டது.இதன் நினைவாக லஸ்ஸா வைரஸ் பெயரிடப்பட்டது. இது இரண்டு முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்ட எலி(Rat)களின் சிறுநீர் அல்லது மலம் , மாசுபடுத்தப்பட்ட உணவு ஆகியவை மூலம் இந்த காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.
லஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சலின் அறிகுறிகள் 1-3 வாரங்களுக்குப் பிறகு தோன்றும்.
லேசான சில அறிகுறிகள்:
- காய்ச்சல், (Fever)
- சோர்வு,(Tiredness)
- பலவீனம் (Weakness)
- தலைவலி (head ache)
தீவிர அறிகுறிகள்:
இருப்பினும், பாதிக்கப்பட்ட 20 சதவீத நபர்களில்,
- இரத்தப்போக்கு, (Bleeding)
- சுவாசிப்பதில் சிரமம், (Difficulty breathing)
- மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்தல்,(Recurrent Vomiting)
- முக வீக்கம், (Facial swelling)
- ரத்தக்கசிவு (ஈறுகள், கண்கள் அல்லது மூக்கில்),
- மார்புவலி ,
- முதுகு மற்றும் வயிற்றில் வலி போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்படலாம்.(pain)
நரம்பியல் பிரச்சனைகள்:
- காது கேளாமை,(Deafness)
- நடுக்கம் (Trembling)
- மூளையழற்சி(Encephalitis)
உள்ளிட்ட நரம்பியல் பிரச்சனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
மரணம் கூட ஏற்படலாம்:
இரண்டு வார அறிகுறிகளுக்குப் பிறகு, பல உறுப்பு செயலிழப்பு காரணமாக மரணம் கூட ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழிகள்:
எலி(Rat)கள் மற்றும் நோய் பரவும் இடங்களுடனான தொடர்பைத் தவிர்ப்பது, வீடு மற்றும் பிற இடங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிப்பது, எலிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது, எலிகளால் நுழைய முடியாத கொள்கலன்களில் உணவை வைத்திருப்பது, இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மூலமாகவும் அல்லது சளி சவ்வுகள் மூலமாகவும் மற்றொரு நபருக்கு இவ்வைரஸ் பரவக்கூடும். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.லாசா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழிகள் இதுவே.