லாக்டவுன் திட்டம்: தமிழகம்-புதுச்சேரி அரசுகள் மறுபரிசீலனை செய்ய உத்தரவு..!!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1, 2-ஆம் தேதிகளில் பொதுமுடக்கம் அறிவிப்பது குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தைவைக்க நேரிடும்- தேர்தல் ஆணையம் மீது கோபமடைந்த நீதிபதிகள்..!!
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் நீதிபதிகளிடம், ‘ஆக்சிஜன் தேவை குறைந்தவா்கள் கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனா். 2,400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் சென்னையில் உருவாக்கப்படுகிறது. அவற்றில் 1,200 படுக்கைகள் கொண்ட மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படுகிறது,’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து, அதனை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்க உத்தரவிடுவோம். சிகிச்சைக்கும், விஐபி கலாசாரத்துக்கும் இடமளிக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான சிகிச்சையளிக்க வேண்டும். கள்ளச்சந்தையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்கப்படுவது குறித்து மருந்து கட்டுப்பாட்டாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க….
தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க..!!