ரூ.10,000/- ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு..!!
காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் District Consultant, Psychologist, Data Entry Operator ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் :TN Govt
பணியின் பெயர்:District Consultant, Psychologist, Data Entry Operator
பணியிடங்கள்:03
கடைசி தேதி: 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
கல்வித்தகுதி :
10th Pass/ அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஊதியம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி :
துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,
எண் 42 A, ரயில்வே ரோடு,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502