ரிசர்வ் வங்கி: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது தங்கம்..!! - Tamil Crowd (Health Care)

ரிசர்வ் வங்கி: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது தங்கம்..!!

ரிசர்வ் வங்கி: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது தங்கம்..!!

தங்கப்பத்திரத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு ரிசர்வ் வங்கி தள்ளுபடி அறிவித்துள்ளது.

தங்கப் பத்திரத் திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. தங்கப் பத்திரத் திட்டத்தின் நான்காம் கட்ட விநியோகம் நாளை (12.07.21) முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரங்கள் கிராம் 4,807 ரூபாய் என இந்த முறை ரிசர்வ் வங்கி விலை நிர்ணையித்துள்ளது. குறைந்த செலவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்கப் பத்திரத் திட்டம் சிறந்ததொரு தேர்வாகவே பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரத்தை வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது . அதாவது ஒரு கிராமை டிஜிட்டல் முறையில் 4757 ரூபாய்க்கு வாங்கலாம் .

தங்கப் பத்திரத் திட்டம் 2015 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது . தங்கத்தின் மதிப்பு உயர உயர பத்திரத்தின் மதிப்பும் உயரும் . இதுபோக , ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும் . இதற்கு ஜிஎஸ்டி கிடையாது .

இத்திட்டத்துக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . அதனால் மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

Leave a Comment