''மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது -என்பதற்கு இந்த கொரொனா கொள்ளை சாட்சி''..!! - Tamil Crowd (Health Care)

”மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது -என்பதற்கு இந்த கொரொனா கொள்ளை சாட்சி”..!!

 ”மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது -என்பதற்கு இந்த கொரொனா கொள்ளை சாட்சி”..!!

கைவிடப்பட்ட மக்களின் துயரம் நெஞ்சைப் பிழிகிறது. மதவாத,சாதியவாத அரசியல் சாதித்தது பிணக்காடுதான்! ‘எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்களாக இருப்பதாகக் கூறுகிறார் வாராணாசியைச் சேர்ந்த நிர்மலா கபூர். வாராணாசி பிரதமர் மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.’ என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

இந்த செய்தியையும் படிங்க….

‘ பெண்கள் மாதவிடாய்க்கு -முன்பும் பின்பும் 5 நாள்கள் கோவிட் தடுப்பூசி போடக் கூடாதா?’ – அரசு விளக்கம்..!!

அவர் மேலும், ”18-44 வயதுடையோர் தனியாரிடம்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் விரும்பினால் இலவச ஊசி போட்டுக் கொள்ளும் வயதை குறைத்துக் கொள்ளலாம் மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதற்கு இந்த கொரொனா கொள்ளை சாட்சி. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி மத்திய அரசால் இலவசமாகவே போடப்பட்டது”என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார்.

இந்தியாவில் 54 சதவீத கொரோனா பாதிப்புகள் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர் களிடையேதான் அதிகம் பரவுவதாக மத்திய அரசு ஆய்வுகளின் மூலம் தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில், மத்திய அரசு வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

ஆனால், நடைமுறையில் உள்ளபடி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும், 18 முதல் 44 வயதுடையவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

இந்த செய்தியையும் படிங்க….

 அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!!

மத்திய அரசுக்கு இதுவரை 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூயாய் ஆகவும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரேநாளில், ரூ.250 முதல் ரூ.450 வரையில் அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வால், மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்துதான் ஜோதிமணி எம்.பியும். தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Leave a Comment