மே 26-இல் கருப்புகொடி போராட்டம்:விவசாயிகள் சம்மேளனம் முடிவு..!!
புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் சம்மேளனம் (40 சங்கங்களின்கூட்டமைப்பு) மத்திய அரசுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் வருகிற மே 26 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் -ஓராண்டுக்கு நிறுத்தம்..!!
இதுதொடா்பான பேட்டியில், விவசாயிகளின் தலைவா் பல்வீா்சிங் ராஜேவால், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வருகிற 26-ஆம் தேதியுடன் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி 6 மாதம் நிறைவடைகிறது. மேலும் பிரதமா் மோடி மத்தியில் ஆட்சியமைத்து 7 ஆண்டுகளாகிறது. எனவே அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்றாா் அவா்.
‘மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது உரங்கள் விலை, டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயம் செய்யமுடியவில்லை. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பெருநிறுவன முதலாளிகளுக்கே அது ஆதாயம். மேலும் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை கைவிடக்கூடாது’ என்றாா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட முடிவுசெய்த விவசாயிகள் போலீஸாா் தடுத்ததையும் மீறி, தில்லி எல்லையை நோக்கி கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் தேதி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியையும் படிங்க…
உப்பை கொண்டு இந்த பரிகாரம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா…?