மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு:அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம்.
அனுப்புநர்:
முனைவர். சி. உசாராணி, எம்எஸ்சி, பிஎட், பிஎச்டி.
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை. 600 006.
பெறுநர்:
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர், கல்வி புதுச்சேரி, அனைத்து மாவட்ட அரசு தேர்வுகள், உதவி இயக்குனர்கள்.
ந. க. எண்:006086/எச்.1/2021. நாள்:23/03/2021.
ஐயா, அம்மையீர்:
பொருள்:
சென்னை 6 -அரசு தேர்வுகள் இயக்ககம் -மேல்நிலை இரண்டாம் ஆண்டு -பொதுத் தேர்வு மே 2021 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்- தொடர்பான அறிவுரைகள்- அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் தொடர்பாக.
*********
மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு , பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதனை , முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து , உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.