மே 2 வாக்கு எண்ணிக்கை அன்று- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்யபிரதா சாகு..!! - Tamil Crowd (Health Care)

மே 2 வாக்கு எண்ணிக்கை அன்று- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்யபிரதா சாகு..!!

 மே 2 வாக்கு எண்ணிக்கை அன்று- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்யபிரதா சாகு..!!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு எந்திரங்கள், 78 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

 18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால்- தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!! 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையா என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில்,

“வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Comment