"மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லை"- தமிழக அரசு.!! - Tamil Crowd (Health Care)

“மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லை”- தமிழக அரசு.!!

 “மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லை”- தமிழக அரசு.!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க…

மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு..!! 

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, தினசரி இரவு ஊரடங்கு, உள்ளிட்டவை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment