மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் : மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி- முன்னிலை!!
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி 8.30 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் பாஜக 33 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.