மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசு முன்வர வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி (26-05-2021) -ன் ஆறு மாதம் நிறைவுபெறும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் – இயற்கை மருத்துவ குறிப்புகள் என்னென்ன..!!
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள், உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முன்வராதது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும், விவசாயிகள் நலனுக்காக அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.