'முழுமை பெறாத முகவரிகள்- திரும்பும் தபால் வாக்குகள்'- சரிசெய்ய ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்..!! - Tamil Crowd (Health Care)

‘முழுமை பெறாத முகவரிகள்- திரும்பும் தபால் வாக்குகள்’- சரிசெய்ய ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்..!!

 ‘முழுமை பெறாத முகவரிகள்- திரும்பும் தபால் வாக்குகள்’- சரிசெய்ய ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்..!! 

முழுமை பெறாத முகவரியாக தபால் வாக்குகள் திரும்புவதால் சம்பந்தப்பட்டவர்கள் இதை சரி செய்ய வேண்டும் என ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

 இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தபால் வாக்கு இன்னும் கிடைக்கப் பெறாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உடனடியாக தங்களுடைய தேர்தல் பயிற்சி மற்றும் பணிக்கான ஆணை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள தாலுகா அலுவலகம் சென்று தங்களது தேர்தல் பணி ஆணையை காண்பித்து தபால் வாக்கு  கிடைக்காததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: இத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை..!! 

 மேலும் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும், பல நூற்றுக்கணக்கான தபால் வாக்குகள் முகவரி சரியில்லாமல் அஞ்சலகம் மூலம் திரும்பி வந்துள்ளன. தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே தபால் வாக்கு கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று தங்கள் வாக்கை பெற்று ஜனநாயக ஜனநாயக கடமையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment