முருங்கை இலை, நெல்லி(Amla)(Immunity boosting drink)-நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த..!!
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது முக்கியமான ஒன்றாகும்.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த:
முருங்கை இலை, நெல்லி(Amla) கனி பானம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து போராடவும் உதவுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…
நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்-‘ வெற்றிலை,கிராம்பு’..!!
தேவையான பொருட்கள்:
1/2 டீஸ்பூன் முருங்கை இலைகள்
1 நெல்லிக்கனி(Amla)
1/2 தண்ணீர்
செய்முறை:
முருங்கை இலை – நெல்லிக்கனி பானம் செய்ய 1/2 டீஸ்பூன் முருங்கை இலை தூள் அல்லது முருங்கை இலைகள் மற்றும் நெல்லிக்கனியை(Amla) எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரை கிளாஸ் தண்ணீரில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அவற்றை வடிகட்டவும்.
பானத்தை எப்போது பருகலாம்?
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் முருங்கை இலை – நெல்லிக்கனி கபானத்தை பருகலாம்.
பானத்தை எப்போது தவிர்க்க வேண்டும்?
மேலும், ஒருவர் தங்கள் உணவோடு இந்த பானத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்
நெல்லிக்காய் (Amla) பயன்கள்:
- நெல்லிக்காய்(Amla) வைட்டமின் சி (Vit C)நிறைந்து காணப்படும் பொருள் ஆகும்.
- இவற்றை, தொற்றுநோய்களின் போது நிறைய சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
- இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருப்பினும், அம்லா சாக்லேட் அல்லது பவுடர் போன்ற பதப்படுத்தப்பட்ட அம்லா தயாரிப்புகளை எடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
- முக்கியமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் பழம் புதியதாக இருக்க வேண்டும்.
முருங்கை இலைகள் பயன்கள்:
- முருங்கை இலைகள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
- மேலும் அம்லாவுடன் இணைந்தால் அது நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.