“முந்தைய மாத மின் கட்டணத்தையே மே, ஜூனிலும் வசூலிக்க வேண்டும்”..!!
கொரோனா பரவல் காரணமாக முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா 2ஆவது அலையில் சிக்கி, ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்வாரிய ஊழியர்கள், வீடுகளுக்குச் சென்று மின் கணக்கீடு செய்தல், மின் தடை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதால், நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
7th Std Bridge Course Worksheet and Key Answers (All Subjects):
🔴🔴 7th Std Tamil Bridge Course Worksheet and Key Answers 2021|
🔴🔴 7th Std English Bridge Course Worksheet and Key Answers 2021.
🔴🔴 7th Std Maths Bridge Course Worksheet and Key Answers 2021.
🔴🔴 7th Std Science Bridge Course Worksheet and Key Answer 2021.
🔴🔴 7th Std Social Science Bridge Course Worksheet and Key Answers 2021|
எனவே, வரும் நாட்களில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், மின்நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று மின்சாரம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வேலை நேரம் மதியம் 2 மணி வரை குறைக்கப்பட்டது போல, மின்கட்டண வசூல் மையங்களில் பணி நேரத்தை மதியம் 1.30 வரை குறைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.