முதுநிலை ஆசிரியர் தேர்வு (PG TRB) எழுதுவோருக்கு புதிய
சிக்கல்
முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப டி.ஆர்.பி(TRB) தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
டி.ஆர்.பி(TRB) தேர்வு வாரியம் புது அறிவிப்பு:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 முதுநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. (TRB) சார்பில் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 இலட்சம் பட்டதாரி தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு கணினி மூலம் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே இத்தேர்வுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளன.
2-தவணை தடுப்பூசி கட்டாயம்:
இந்நிலையில் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி
செலுத்தாத தேர்வர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக (RTPCR) சோதனை செய்த சான்றிதழை தேர்வுக்கு வரும்பொழுது கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்குமாறு கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி.(TRB)க்கு தேர்வர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ”நெட் செட்” பட்டதாரிகள் சங்க செயலர் முனியாண்டி கூறியதாவது:
இதற்கு முன் நடைப்பெற்ற எந்த தேர்வுகளிலும் இது போன்ற கட்டுப்பாடுகள்ள எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் முதுநிலை ஆசிரியர்
தேர்வுக்கு மட்டும் இப்புதிய கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)அறிவித்துள்ளது. இப்புதிய அறிவிப்பால் தேர்வர்கள் பலர் சிரமத்திற்கு ஆளாக நேரிட கூடும். இதைக் கருத்தில் கொண்டு தேர்வுவாரியம் இக்கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என
கூறியுள்ளார்.