முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு நீக்கப்படுமா..??
அரசுமேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள
2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் ,
கணினி ஆசிரியர்
பணியிடங்களை நிரப்பும் வகையில் , ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது .
முதல்முறையாக முதுகலை ஆசிரியர் தேர்வெழுத வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது .
வயது வரம்பு:
பொதுப் பிரிவினருக்கு 40, இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
இதற்கு 40 வயதைக் கடந்த B.Ed., பட்டதாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் , பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் செயலரை சந்தித்து முறையிட்டனர் . தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு அளித்தனர் .
B.Ed., பட்டதாரிகள் எதிர்பார்ப்பு:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் , வயது வரம்பு நீக்கப்படுமா என்று 40 வயதைக் கடந்த B.Ed., பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர் .