முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்..??? - Tamil Crowd (Health Care)

முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்..???

 முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்..???

முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் சிறப்பு ஆசிரியர் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கிடப்பில் போட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க..

பள்ளிகளுக்கு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரிஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.1-ம் தேதி வெளியிட்டது. அதற்கான இணையவழி போட்டித் தேர்வு ஜுன் 26, 27-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 1 முதல் 25-ம்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

அதேபோல், அரசு பள்ளிகளில்1,598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்.26-ம் தேதிவெளியிட்டிருந்தது. அதற்கானஇணையவழி போட்டித்தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடத்தப்படும் என்றும், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 31 முதல் ஏப்.25 வரை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்பப் பதிவும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும்சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்டது தேர்வர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த செய்தியையும் படிங்க..

ஆசிரியர் பணி நியமனங்களில் ஊழல் முறைகேடு: சட்டபூர்வமான நடவடிக்கை தேவை – கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்..!! 

ஆன்லைன் பதிவு தொடங்க தாமதமாகி வரும் நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இணையவழி தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகமும் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment