முட்டை புதியதா? பழையதா? – எப்படி கண்டுபிடிப்பது..!!
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பலர் முட்டையை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பார்கள். பிரிட்ஜின் உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும். அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது.
இந்த செய்தியையும் படிங்க…
சளி, இருமல், ஆஸ்துமா, தலைவலி, மூக்கடைப்பு தொல்லை குணமாக-கருஞ்சீரகம் (Karunjeeragam nanmaikal)..!
முட்டை புதியதா? பழையதா?
வாங்கி வரும் முட்டை புதியதா? பழையதா? என்பதையும் எளிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போட வேண்டும்.
(FRESH EGG)
முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை(FRESH EGG).
A WEEK OLD
டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் A WEEK OLDஆகி விட்டது என்று அர்த்தம்.
3-4 WEEK OLD
நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தால் 3அல்லது 4 வாரம் 3-4 WEEK OLD பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது.
VERY OLD EGG
ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது VERY OLD EGG என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது. நாளாக நாளாக முட்டைக்குள் இருக்கும் காற்று விரிவடையும். முட்டைக்குள் இருக்கும் நீர்பரப்பை காற்று நிரப்பிவிடும். அதனால் முட்டை மிதக்க தொடங்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்-‘ வெற்றிலை,கிராம்பு’..!!
நோய்த்தொற்று
கெட்டுப்போன முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா (Bacteria)வளர்ச்சி அடைய தொடங்கிவிடும். அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். முட்டையை காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.