முக்கியச் செய்தி:கொரோனா எதிரொலி., மத்திய அரசு போட்ட அதிரடி தடை உத்தரவு.!
நாட்டில் கடந்த மார்ச் மாதம் வரை கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா நோய் தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!! |
இந்நிலையில், இந்தியாவில் நோய் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ள காரணத்தினால், இந்த ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.