மிரட்டும் கொரோனா..!! மாநிலத்தில் மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. !! - Tamil Crowd (Health Care)

மிரட்டும் கொரோனா..!! மாநிலத்தில் மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. !!

 மிரட்டும் கொரோனா..!! மாநிலத்தில் மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள் ..!!

நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலை கடுமையாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியையும் படிங்க….

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! -.காப்பாத்துங்க..!! 

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.20 முதல் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதன்படி, கேரளாவில்  (ஏப்.24) அரசு அலுவலங்கள், பொது துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணி நாட்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்ல அனுமதியுண்டு.

ஏப்ரல் 24, 25 ஆம் தேதிகளில் அத்தியாவசிய கடைகள் மற்றும் காய்கறி, பழம், பால்,மீன், இறைச்சி ஆகிய கடைகள் மட்டும் திறக்கலாம். ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் உணவுகள் பார்சல் மட்டும் வழங்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க….

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!! 

பள்ளிகளில் ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடக்கும். டியூசன் மையங்கள் திறக்க அனுமதியில்லை. கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படலாம்.

மாநிலத்தில் கடைகள் இரவு 9:00 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்ததை வர்த்தகர்கள் கடை பிடித்து வருகின்றனர்.

Leave a Comment