மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்.
கடந்த இரண்டு நாட்களாக மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதைத் தொடர்ந்து சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தவர்களிடம் இருந்து சுமார் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.