மாவட்டங்கள் இடையே செல்ல சான்றிதழ்கள் அவசியம்: இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

மாவட்டங்கள் இடையே செல்ல சான்றிதழ்கள் அவசியம்: இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு..!!

 மாவட்டங்கள் இடையே செல்ல சான்றிதழ்கள் அவசியம்: இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு..!!

 இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் 27,0000 -யை தாண்டியுள்ளது. அதோடு தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க…

 உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் ஆதார் எடுத்து விடுங்கள்- எப்படி தெரியுமா? 

தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்த வண்ணம் உள்ளதை, கருத்தில் கொண்ட முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இன்று காலை 4 மணி முதல் வரும் 24ம் தேதி காலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், தொற்று பரவலை முறியடிக்கவும் தமிழக அரசு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வோர்க்கு இ பாஸ் தேவையில்லை. ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக பயணம் செய்வோர் கட்டாயம் முறையான சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு- புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR..!! 

மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக இபாஸ் எடுக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment