மாநில அரசுகளுக்கு- இலவசமாக தடுப்பூசி தரப்படும்: மத்திய அரசு..!! - Tamil Crowd (Health Care)

மாநில அரசுகளுக்கு- இலவசமாக தடுப்பூசி தரப்படும்: மத்திய அரசு..!!

 மாநில அரசுகளுக்கு- இலவசமாக தடுப்பூசி தரப்படும்: மத்திய அரசு..!!

மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி தரப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மையில் கொரோனா தடுப்பூசியின் விலையை அதன் தயாரிக்கும் நிறுவனம் இரண்டுமடங்காக உயர்த்தியது. அதன்படி அரசுக்கு ரூ.400 எனவும் தனியாருக்கு ரூ.600 எனவும் நிர்ணயம் செய்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது.

 இந்த செய்தியையும் படிங்க….

இது உங்கள் இடம் : விஷம் தடவாதீர் ஆசிரியரே..!! 

விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு நேரடியாக கடிதம் எழுதியதோடு ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பதிலளிக்கும் வகையில் தான் மத்திய அரசு, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ரூ.150 க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Comment