மாத ஊதியம் பெறுவோர்- கொரோனாவால் இறந்தால் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு..!!
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு ரூ.7 லட்சம் இழப்பீடு தருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
உப்பை கொண்டு இந்த பரிகாரம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா…?
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. அதிலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் நிலைமை தான் மிக மோசம்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழி இருப்பது சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்குவது வழக்கம். தற்போது அது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லாமல் வேறு எப்படி இறந்தாலும் இந்த இழப்பீடு தொகை கிடைக்கும். இழப்பீடு பெறுவதற்கு படிவம் 51F-ஐ பூர்த்தி செய்து பணிபுரியும் நிறுவனத்தில் கையெழுத்து பெற்று, ரத்து செய்யப்பட்ட காசோலை, இறப்பு சான்று, வாரிசு சான்று ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இறந்தவரின் பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை பெற படிவம் 20 மற்றும் 10D ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்து ஒரு வாரத்திற்குள் பணம் கிடைக்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடவடிக்கை எடுக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? – புதிய பரிந்துரைகள்..!!
அதே போல் மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஊதியம் பெறுவோருக்கு இழப்பீடு தொகை ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.