மாதம் ரூ.2,475 வருமானம் கிடைக்கும். POST OFFICE அருமையான திட்டம்..!!
மாத வருமான திட்டம்:
அஞ்சல் அலுவலகத்தில் (PO) பணத்தையும் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சல் துறையில் பல திட்டங்கள் உள்ளது, தற்போது நாம் பார்க்கப்போவது மாத வருமான திட்டம்.
இந்த செய்தியையும் படிங்க…
வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!!
மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறந்த திட்டம்:
இதில் ஒன்றரை மற்றும் கூட்டு கணக்கு இரண்டையும் திறக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த தபால் நிலைய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் செய்து கொள்ளலாம். பின்னர் கூட்டு கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் முதலீடு செய்யலாம். மாத முதலீட்டுத் திட்டத்தில் 4.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆகும்.
எனவே மாத வருமானம் ரூ.2475 கிடைக்கும். தபால் நிலையத்தின் கீழ் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டு கணக்கை திறக்க முடியும். இந்த கணக்கில் வருமானத்தை ஒருவருக்கொருவர் சமமாக பிரித்துக் கொள்ள முடியும். மாத வருமானம் திட்டத்தின்கீழ் தபால் நிலையத்தில் கணக்கை திறக்க அருகிலுள்ள அஞ்சல் கிளைக்கு சென்று சேமிப்பு கணக்கை திறக்க வேண்டும். இதற்கு
அடையாள ஆதாரம்,
குடியிருப்பு ஆதாரம்
மற்றும் பிற ஆவணங்கள் தேவை.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்:
நீங்கள் அதை குறைத்து ஒரு வருடம் முன்பு கூட பணத்தை எடுக்கலாம். ஒரு வருடம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணத்தைத் திரும்பப் பெறுவது கணக்கிலிருந்து 2% குறைக்கப்படும்.