மாங்கொட்டை- அதிக இரத்த அழுத்த பாதிப்புகளை சீர்செய்ய உதவும் ..!! - Tamil Crowd (Health Care)

மாங்கொட்டை- அதிக இரத்த அழுத்த பாதிப்புகளை சீர்செய்ய உதவும் ..!!

 மாங்கொட்டை- அதிக இரத்த அழுத்த பாதிப்புகளை சீர்செய்ய உதவும் ..!!

இரத்த சோகை:

இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது(RBC), இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க… 

 தூதுவளை (THUTHUVALAI) -இலை, காய், ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது : பார்க்கலாமா..?? 

மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும்.

கரு வளர்ச்சி சீராக அமையும்:

மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A  (Vit A), பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

உடல் எடைக் குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

அதிக இரத்த அழுத்த பாதிப்பு:

இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். 

கண் பார்வை:

மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும்.

இதய நோய்கள்:

மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஓடிவிடும்.

இந்த செய்தியையும் படிங்க… 

 சுண்டைக்காய்  – மருத்துவ பயன்கள் என்னென்ன..??  

இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை சரிசெய்யும்:

சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது.

Leave a Comment