மருந்தாளுநர்- வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 67 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 5 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் அஞ்சலகங்கள் செயல்படும்- நேரம் குறைப்பு!
காலியிடங்கள்: 67
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.17,900 – 47,920
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2021
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விவரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2021
மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.