மருத்துவ குறிப்பு:தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்
*ஆல்வல்லி கிழங்கை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
*இலுப்பை மர இலைகளை மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
*உளுந்து, சிறு பருப்பு, பச்சரிசி மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாக தாய்ப்பால் சுரக்கும்.
*தகுப்பைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
*தக்காளியை, வினிகர் சேர்த்து அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
*நீல துளசி சாற்றில் (இரண்டு தேக்கரண்டி) ,தேன் (ஒரு தேக்கரண்டி) கலந்து குடித்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.