மருத்துவக் குறிப்பு: இருமல் குணமாக.
இருமல் குணமாக.
- வெற்றிலையுடன், மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.
- பூண்டு சாறு எடுத்து அதில் வெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் குணமாகும்.
- வெந்தயக் கீரையுடன் ,உலர்ந்த திராட்சை (10) சீரகம் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
- வில்வம் இலையுடன் (மூன்று), மிளகு (3) சேர்த்து பொடி செய்து காலையில் மட்டும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.
- வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவள்ளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- லவங்கப்பட்டை, அக்கரா, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு. இருமல் ஆகியவை விலகும்.
- முளைக்கீரை, அதிமதுரம், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
- முருங்கைக் கீரை சாற்றில், தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.
- முருங்கைக்காயை ,மிளகு ,மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கபம் ,இருமல் விலகும்.
- அதிமதுரம், சுக்கு, ஏலக்காய், தாளிசபத்திரி, மிளகு, முந்திரி பருப்பு, தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் உட்பட வேறு சில நோய்களும் குணமாகும்.
- அறுவதா இலையை காயவைத்து நெருப்பில் போட்டு எரித்தால் வரும் புகையை முகர்ந்தால் நாள்பட்ட இருமலும் குணமாகும்.
- ஆகாயத்தாமரை இலை சாற்றில், சீரகத்தை மூன்று கிராம் அரைத்து சாப்பிட்டால் நீர்சுருக்கு, சீதபேதி, வரட்டு இருமல் ,போன்றவை குணமாகும்.
- ஆகாயத்தாமரை இலை சாற்றுடன் ,பன்னீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
- ஆடாதோடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- ஆடாதொடை வேர் ,கண்டங்கத்திரி வேர், திப்பிலி பொடி மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
- ஆடாதோடா இலை, திராட்சை, கடுக்காய் மூன்றையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
- ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் குணமாகும்.
- ஆலமர விழுதை பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து குடித்தால் சளி, இருமல் ,நெஞ்சு சளி போன்றவை குணமாகும்.
- இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து காலை மாலை இரு வேளையும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் காச நோய் ,வறட்டு இருமல் ஆகியவை குணமாகும்.
- இலுப்பைப் பூக்களை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்தால் தாகம், இருமல் நிற்கும்.
- உகா மரத்தின் இலையை சாறு பிழிந்து 15 மில்லி அதில் சர்க்கரை கலந்து குடித்தால் நாள்பட்ட இருமல் குணமாகும் .
- உருளைக்கிழங்கு இலைச்சாற்றை தினமும் 5 முதல் 10 மில்லி வரை குடித்து வந்தால் நாள்பட்ட இருமல் ,தூக்கமின்மை போன்றவை குணமாகும் .
- எலுமிச்சை துளசியை கசாயம் வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட இருமல் குணமாகும்.
- எலுமிச்சம் பழசாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
- கடுகை 20, தேன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் மூச்சிரைப்பு ,இருமல் குணமாகும்.
- கற்பூரவள்ளி இலையை சாறு பிழிந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
- தனியா, துளசி இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சி குடித்தால் சளி, இருமல், சைனஸ், தும்மல் ,மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
- தூதுவளைக் கீரை( 3) அதிமதுரம் ஒரு துண்டு, தனியா ஒரு ஸ்பூன் மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வறட்டு இருமல், ஆஸ்துமா குணமாகும்.
- பரட்டைக் கீரை சாறில், சுக்கை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
- பண்ணைக் கீரைச் சாறில், அதிமதுரத் பொடியை கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
- புதினா இலை ஒரு கைப்பிடி, மிளகு 3 இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும் .
- புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- பெருங்காயத் உடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும்.