மருத்துவக் குறிப்புகள்: தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க,
தலைப்பொடுகு உதிர,…
தலைப்பொடுகு உதிர:
- வெள்ளை வால்மிளகை அரைத்து பாலில் கரைத்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் தலைப் பொடுகு உதிர்ந்து விடும்.
பல்வலி குணமாக:
- துளசிச் சாற்றில் சிறிது கிராம்புத் தூளும், கற்பூரமும் கலந்து சொத்தையுள்ள பல்லிலும், பல் ஈறுவீக்கமுள்ள இடத்திலும் வைக்க பல்வலி குறையும்.
- கருஞ்சீரகத்தை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின் அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க பல்வலி பறந்து போகும்.
சேற்றுப்புண், பித்த வெடிப்பு குணமாக:
- வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்து சேற்றுப்புண், பித்த வெடிப்பிற்கு போட்டால் குணமாகும்.
தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க:
- தலையை வாரிப் பின்னிக் கொள்ளும் போது ஏழெட்டுத் தடவைகளாவது சீப்பைக் கொண்டு அழுத்தி வாரிக் கொள்ளுங்கள். இதனால் மயிர்க்கால்களுக்கு அதிக இரத்த ஓட்டம் நன்றாக ஓடும். தலைமுடி உதிராமல் காக்கும்.
- வாரத்திற்கு ஒரு முறை வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் முடி உதிராது கருமையாக இருக்கும்.
பேன் தொல்லை ஒழிய:
- காட்டுச் சீரகத்தை அரைத்து தலையில் பூசி வந்தால் பேன் தொல்லை அகலும்.
இரத்த சோகையை நீக்க:
- தினம் ஒரு கீரை வகையை உண்ணுதல், பழங்கள், இரும்புச்சத்து, B-12,போலிக் அமிலம்,
- B-Complex, போன்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்ணுதல்.
- காலை உணவை கட்டாயமாக உண்ணுதல்.
- ஈரல், கோழிக்கறி, மீன் இவற்றை நன்கு சாப்பிடலாம்.
- மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவதும் நல்லது.
- பசும்பாலில் தேனைக் கலந்து தினமும் காலையில் பருகுவதும் நல்லது.