மன அழுத்தத்தை நீக்க- சிரிப்பு யோகா பயிற்சி..!!
மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.
இந்த செய்தியும் படிங்க…
அதிகாலையில் சாப்பிட வேண்டிய -சத்தான உணவுகள்..!!
நல்ல மன நிலை:
தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.
மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்பயிற்சி:
ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.
ஆரோக்கிய பலன்கள்:
நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.
வாழ்வாதாரம்:
சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். இதனை நாம் நல்ல நண்பர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கின்றனர்.
இந்த செய்தியும் படிங்க…
அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்..!!
‘துன்பம் வரும் போது சிரி‘ என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆனால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும் போது நமக்கு அந்த காரியங்களிடமிருந்து மீண்டு வரவும், அத்தகைய கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.