மனநிலை அமைதிப்படுத்த தயிர் சாதம் உதவும் தெரியுமா..?? - Tamil Crowd (Health Care)

மனநிலை அமைதிப்படுத்த தயிர் சாதம் உதவும் தெரியுமா..??

மனநிலை அமைதிப்படுத்த  தயிர் சாதம் உதவும் தெரியுமா..??

தயிர் சாதம் நம் நாவின் சுவை மொட்டுகளுக்கு திருப்தி அளிக்கும் தன்மைக் கொண்டது.

அதை ஒவ்வொரு முறை சுவைக்கும்போதும், “அடடா இதல்லவா அமிர்தம்” எனும் அளவுக்கு உச்சுக்கொட்டுகின்றனர் தயிர் சாத பிரியர்கள். இது ஒரு சுவையான திருப்தி தரக்கூடிய உணவு மட்டுமல்ல. இதில்  நன்மைகள்  நிறைந்திருக்கு. அதெல்லாம் என்னென்ன என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இந்த செய்தியையும் படிங்க… 

 மிளகில்(PEPPER) இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்- என்னென்ன..?? 

நோய் எதிர்ப்பு சக்தி:

தயிர் சாதம் தினசரி உட்கொள்வது நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, மேலும் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் குடல் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்கும் தன்மை கொண்டது.

கண்களுக்கு நல்லது:

சுகாதார நிபுணர்களின் தகவல்களின்படி, கறிவேப்பிலையில் வைட்டமின் A (Vit  A) நிறைந்துள்ளதால் கண்பார்வைக்கு நல்லது. தயிரில் கருவிழியைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளது.

ஆரோக்கியமான சருமம்:

தயிர் ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டிருப்பதால் இதோடு சாதம், முளைகட்டிய பயிர் வகைகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்ளும்போது, ​​அவை உங்கள் சருமத்தை சீராக்குவதோடு, வறண்ட சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

நீரிழிவு நோய்யெதிர்ப்பு பண்புகள்:

கறிவேப்பிலையில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவற்றை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்.

மனநிலை சீராகும்:

தயிர் ஒரு சிறந்த மனஅழுத்த நிவாரணி. அதோடு மனநிலை அமைதிப்படுத்தும் தன்மைக்கொண்டது. ஆய்வுகளின்படி, புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் தயிரில் காணப்படும் நல்ல கொழுப்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் மனநிலையை விரைவாக மேம்படுத்துகின்றன.

இரத்த அழுத்த கட்டுப்பாடு:

தயிரில் சிறந்த புரதங்கள் மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

சளி, இருமல், ஆஸ்துமா, தலைவலி, மூக்கடைப்பு தொல்லை குணமாக-கருஞ்சீரகம்  (Karunjeeragam nanmaikal)..!  

எலும்பு ஆரோக்கியம்:

ஒரு கப் தயிரில் சுமார் 275 மி.கி கால்சியம் உள்ளது மற்றும் தினசரி கால்சியம் சத்துள்ள தயிர் எடுத்துக்கொள்வது எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது, மேலும் அவற்றை பலப்படுத்தவும் உதவும்.

Leave a Comment